அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் உள்ள தெருக்களில் கால்வாய் வசதி செய்யப்படாமல் உள்ளது. இதனால் மழை பெய்யும்போது ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்பதுடன், குளம் போல் காட்சி அளிக்கிறது. மேலும் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.