உடைந்த கால்வாய் சிமெண்டு சிலாப்

Update: 2025-05-04 19:24 GMT

வேலூர் சங்கரன்பாளையம் வ.உ.சி. நகர் துணை அஞ்சல் அலுவலகம் முன்பு கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாயில் உள்ள சிமெண்டு சிலாப் உடைந்து கம்பிகள் வெளியே நீட்டியவாறு ஆபத்தான நிலையில் இருக்கிறது. இரவில் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். விபரீதம் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சிவராமன், வேலூர்.

மேலும் செய்திகள்