புதர்மண்டிய சுகாதாரவளாகம்
குன்னத்தூர் சந்தியப்பாளையத்தில் சுகாதார வளாகம் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். நாளடைவில் இந்த சுகாதார வளாகம் முறையாக சுத்தம் செய்யப்படாத காரணத்தினால் பயன்படுத்த முடியாமல் போனது. மேலும் சுகாதார வளாக கட்டிடம் தெரியாத அளவுக்கு செடி, கொடிகள் அதிகம் வளர்ந்து கட்டிடத்தை மூடிவருகிறது. அத்தகைய சுகாதார வளாகத்தை சுத்தம் செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுப்பிரமணி, குன்னத்தூர்.