ஆற்காடு நகரில் உள்ள பெரும்பாலான கால்வாய்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டவை. அந்தக் கால்வாய்கள் சரிவர பராமரிக்கப்படவில்லை. மழை நீருடன் கழிவுநீரும் கலந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. 2 நாட்களாக பெய்து வரும் கன மழையின் காரணமாக பெரும்பாலான தெருக்களில் மழை நீருடன் கழிவு நீர் கலந்து ஆங்காங்கே தேங்கி கிடக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, கழிவுநீர் கால்வாய் கட்ட வேண்டும்.
-ஜெயச்சந்திரன், சமூக ஆர்வலர், ஆற்காடு.