திண்டுக்கல் ஆர்.எம்.காலனி வி.ஐ.பி.நகரில் சாக்கடை கால்வாய் மேல் உள்ள தரைப்பாலம் சேதம் அடைந்து உள்ளது. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் கூட செல்ல முடியவில்லை. இரவில் நடந்து செல்வோர் தரைப்பாலத்தில் ஏற்பட்ட பள்ளத்தில் தடுமாறி விழுந்து விடுகின்றனர். எனவே புதிதாக தரைப்பாலம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.