விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகா கோசுகுண்டு அஞ்சல் முத்தார்பட்டி கிழக்கு தெருவில் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. தேங்கிய கழிவுநீர் வீடுகளுக்குள் புகுந்து துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் வாய்ப்பு உள்ளது. மேலும் இப்பகுதியில் உள்ள சாலை மண் சாலையாகவே உள்ளது. எனவே கழிவுநீர் செல்ல வாருகால் அமைத்து, சாலை வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.