விருதுநகர் மாவட்டம் சொக்கலிங்கபுரம் ஊராட்சி மேலபெத்தனுப்பட்டி பஸ் நிறுத்தத்திற்கு பள்ளி-கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் என ஏராளமானோர் தினமும் வந்து செல்கின்றனர். தற்போது பெய்த மழையின் காரணமாக பஸ் நிறுத்தம் அருகில் மழைநீர் கழிவுநீராக தேங்கி உள்ளது. இதனால் பஸ் நிறுத்தம் சுகாதார சீர்கேடுடன் காணப்படுகிறது. ஆதலால் பொதுமக்கள் பஸ் நிறுத்தத்தை பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர். எனவே பஸ் நிறுத்தம் அருகில் மழைநீர் தேங்குவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.