தொற்று நோய் பரவும் அபாயம்

Update: 2023-04-30 10:23 GMT

கும்பகோணம் நகர் ஸ்ரீராம்நகர் பகுதியில் சாலை நடுவே பாதாள சாக்கடை குழி உள்ளது. இந்த குழியில் இருந்து கடந்த 1 வார காலமாக கழிவுநீர் வெளியேறி செல்கிறது. இதன்காரணமாக அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மூக்கை மூடியபடி அந்த பகுதியை கடந்து செல்கின்றனர். மேலும், வெளியேறும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதாள சாக்கடை குழியை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்


மேலும் செய்திகள்