கோம்பை கிராமச்சாவடி அருகில் சாக்கடை கால்வாய் சீரமைப்பு பணிக்காக பழைய சாக்கடை கால்வாய் அகற்றப்பட்டது. கால்வாய் அமைக்க குழிகள் தோண்டப்பட்டன. 1 மாதம் ஆகியும் சாக்கடை கட்டுமான பணிகள் தொடங்காமல் உள்ளன. இதனால் வீட்டில் இருந்து வெளியே சென்று வர முடியவில்லை. எனவே சாக்கடை கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.