கழிவுநீர் அகற்றப்படுமா?

Update: 2022-08-28 14:41 GMT


மயிலாடுதுறை மாவட்டம் காந்திஜி சாலை மற்றும் திருவாரூர் சாலை சந்திக்கும் இடத்தில் பாதாள சாக்கடை கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். தற்போது மழை பெய்ததால் மேடு, பள்ளங்களில் கழிவுநீருடன், மழை தண்ணீர் தேங்கி விடுகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விடுகின்றனர். இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கழிவுநீரை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், மயிலாடுதுறை.

மேலும் செய்திகள்