நாமக்கல் உழவர் சந்தையின் சுற்றுச்சுவரையொட்டி சாக்கடை கால்வாய் உள்ளது. அதில் ஏராளமான குப்பைகள் குவிந்து கிடக்கிறது. அதனால் கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. அதன் காரணமாக அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. அதை தவிர்க்க சாக்கடை கால்வாயில் உள்ள குப்பைகளை தூர் வாரி கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.