சேலம் மாவட்டம் அமானி கொண்டலாம்பட்டி ஊராட்சி எஸ். நாட்டாமங்கலத்தில் குடிநீர் குழாய் புதைக்கப்பட்டபோது சாலையில் உள்ள சாக்கடை கால்வாயில் மண் சரிந்து நிரம்பியுள்ளது. இதனால் சாக்கடை நீர் தேங்கி நிற்பதுடன் துர்நாற்றம் அதிகம் வீசுகிறது. தற்போது மழைக்காலம் தொடங்கி இருப்பதால் மழைநீர் சாக்கடை கால்வாயில் செல்லாமல் வீட்டிற்குள் புகுந்து விடுகிறது. எனவே சாக்கடை கால்வாயில் உள்ள மண்ணை அகற்றி கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-திவாகர், நாட்டாமங்கலம், சேலம்.