சென்னை வேளச்சேரி ஒராண்டியம்மன் கோயில் தெருவில் கடந்த 3 நாட்களாக வடிகால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்கியபடி உள்ளது. மழைகாலங்களில் தான் இது போன்ற பிரச்சனை என்றால் வெயில் காலத்திலும் இந்தநிலை தொடர்கிறது. சாலையில் கழிவுநீர் தேங்குவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. மேலும் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கும் இடையூராக இருக்கிறது. கழிவுநீர் அகற்றப்பட்டு சுகாதார சீர்கேடு தடுக்கப்படுமா?