சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும்

Update: 2022-08-19 16:51 GMT

சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா ஓலைப்பட்டி கிராமம் சிந்தாமணியூர் பஸ் நிறுத்ததில் இருந்து பாரப்பட்டி செல்லும் சாலையில் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இந்த சாக்கடை நீர் அந்த சாலையில் ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் அதிகமாக உள்ளது. எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும்.

-முருகேசன், சேலம்.

மேலும் செய்திகள்