சேலம் மல்லமூப்பம்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட துளசி நகர் பகுதியில் சாக்கடை வசதி இல்லை. இதனால் கழிவுநீர் சாலையில் ஆறாக ஓடுகிறது. மேலும் அந்த பகுதியில் குப்பைகள் நீண்ட நாட்களாக அகற்றப்படாமல் குவிந்து கிடக்கிறது. இதனால் அங்கு துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே அங்கு குவியும் குப்பைகளை தினமும் அகற்றவும், சாக்கடை கால்வாய் வசதியை ஏற்படுத்தி தரவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ராஜா, சேலம்.