நடவடிக்கை தேவை

Update: 2022-08-18 14:14 GMT

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட அருகுவிளையில் மேற்கு தெரு உள்ளது. இந்த தெருவில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் ஓடையில் தேங்கி கிடக்கும் குப்பைகள் முறையாக அகற்றுப்படுவது இல்லை. இதனால், கழிவுநீர் வடிந்தோட வழியில்லாம் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. எனவே, ஓடையில் குப்பைகளை முறையாக அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெங்கடேஷ், அருகுவிளை

மேலும் செய்திகள்