கோபி வாசு-லே-அவுட் நகர் பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கிருஷ்ணன் வீதி கருப்பராயன் கோவில் அருகே உள்ள வடிகாலில் கலக்கிறது. இது பல மாதங்களாக திறந்த நிலையில் இருப்பதால் துர்நாற்றம் வீசி வருகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவ வாய்ப்பு உள்ளது. இரவு நேரத்தில் அந்த வழியாக செல்பவர்கள் தவறி சாக்கடைக்குள் விழ வாய்ப்பு உள்ளது. உடனே சாக்கடை வடிகாலுக்கு மூடி போட்டு முறையாக அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.