ஆபத்தான சாக்கடை கால்வாய்

Update: 2022-08-17 15:11 GMT

தர்மபுரி மாவட்டம் பைசுஅள்ளி ஊராட்சி மாட்லாம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே செல்லும் கழிவுநீர் கால்வாய் திறந்த நிலையில் உள்ளது. மழை காலங்களில் கழிவு நீர் கால்வாய் தெரியாத அளவுக்கு தண்ணீர் செல்லும் போது, சிலர் அதில் தவறி விழுந்து காயம் அடைகின்றனர். பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக, ஆபத்தான நிலையில் உள்ள சாக்கடை கால்வாயின் மேல்பகுதியை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ஆனந்த்பாபு, மாட்லாம்பட்டி, தர்மபுரி.

மேலும் செய்திகள்