நாகர்கோவில் கோட்டார் டி.வி.டி.காலனியில் இருந்து செட்டிகுளத்துக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் திருப்பத்தில் சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் ஓடையில் சிலாப்புகள் அமைக்கப்படாமல் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி ஓடையில் விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஓடையின் மீது சிெமண்டு சிலாப்புகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும்.
சுபாஷ், டி.வி.டி.காலனி