மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் பஸ் நிலையம் அருகில் மொரக்கார வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலின் அருகில் உள்ள மீன் இறைச்சி கூடத்தில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் வாய்க்காலில் கலப்பதால் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் வாய்க்காலில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்
பொதுமக்கள், வைத்தீஸ்வரன் கோவில்