சாக்கடை கால்வாய் அமைக்கப்படுமா?

Update: 2022-08-14 11:08 GMT

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் தடங்கம் அடுத்த சத்யாநகர் பகுதியில் 7- வது வார்டில் கழிவுநீர் கால்வாய் இல்லாத காரணத்தினால் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் அதிகம் வீசுகிறது. மக்களுக்கு நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் அங்குள்ள சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட துறையினர் சாக்கடை கால்வாய் மற்றும் சாலை வசதிகளை செய்து தர வேண்டும் என சத்யாநகர் 7 -வது வார்டு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்