சின்னசேலம் அருகே பெத்தா சமுத்திரம் வடக்கு தெருவில் கழிவு நீர் கால்வாய் அமைக்கப்படவில்லை. இதனால் அங்குள்ள வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் சாலையில் வழிந்து ஓடுகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.