கோவை மாநகராட்சி 82-வது வார்டுக்கு உட்பட்ட வின்சென்ட் சாலையில் சாக்கடை கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் அங்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. இது தவிர தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக சென்று வரும் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே அங்கு கழிவுநீர் தேங்காத வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.