கழிவுநீர் கால்வாயை ஆக்கிரமித்த புதர்கள்

Update: 2022-08-12 11:27 GMT
தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி வி.பி.சிங் தெரு சாலையோரத்தில் கழிவுநீர் கால்வாய் அமைந்துள்ளது. இந்த கழிவுநீர் கால்வாயில் செடி, கொடிகள்  வளர்ந்து புதர்கள் அடர்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் கழிவுநீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது. கொசுத்தொல்லை அதிகரித்ததுடன் துர்நாற்றம் அதிகம் வீசுகிறது. மழைக்காலம் தொடங்குவதற்குள் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கழிவுநீர் கால்வாயை ஆக்கிரமித்துள்ள புதர்களை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்