சாக்கடை கால்வாய் அமைக்கப்படுமா?

Update: 2022-08-09 17:13 GMT

சேலம் மாவட்டம் மல்லூர் அருகே வாழக்குட்டப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட எருமநாயக்கன்பாளையம் கிராமத்தில் சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் கழிவுநீர் செல்வதற்கு சாக்கடை வசதி இல்லாததால் கழிவுநீர் சாலையில் ஓடுகிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே அங்கு சாக்கடை கால்வாய் அமைத்து தர நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டும்.

-சுரேந்திரன், எருமநாயக்கன்பாளையம், சேலம்.

மேலும் செய்திகள்