சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2022-08-06 14:39 GMT

கோவை பீளமேடு திருப்பதி வெங்கடாசலபதி நகர் பகுதியில் சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் மழைநீருடன் சாக்கடை நீர் கலந்து குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வருகின்றன. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதால், பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்