குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2022-08-04 10:29 GMT

திட்டக்குடி பெரியார் நகரில் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதில் பன்றிகளும் கழிவுநீரில் உருண்டு புரண்டு எழுந்து வீடுகளின் முன்பு சுற்றித்திரிவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் கடும் துர்நாற்றத்தால் வீடுகளில் மக்கள் இருக்க முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றுவதுடன், வடிகால் வாய்க்கால் அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.

மேலும் செய்திகள்