சேலம் சூரமங்கலத்தை அடுத்துள்ள ஆண்டிபட்டியில் சேலத்தாம்பட்டிக்கு செல்லும் சாலையில் பல ஆண்டுகளுக்கு மேலாக சாக்கடை வசதி இல்லை. இதனால் அந்த பகுதி வீடுகளில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும்.
-சேகர், ஆண்டிபட்டி, சேலம்.