கோவை மாநகராட்சி 92-வது வார்டு பாலக்காடு பிரதான சாலையோரம் சுகுணா மில் எதிரே சாக்கடை கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக கழிவுநீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளதோடு கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயமும் நீடிக்கிறது. எனவே சாக்கடை கால்வாயை சீரமைத்து, கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.