சேலம் டி.வி.எஸ். சுடுகாடு நாகம்மாள் தோட்டம் அருகில் கழிவுநீர் குழாய் பதிப்பதற்கு 50 அடி நீளத்தில் சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது. அந்த பள்ளம் சரியாக மூடப்படாமல் கிடக்கிறது. இதனால் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குழியை உடனடியாக மூட வேண்டும்.
-மணிவண்ணன், சேலம்.