மழைநீர் கால்வாய் அமைக்கப்படுமா?

Update: 2022-08-02 15:54 GMT

சேலம் மாவட்டம் மேச்சேரி சந்தை மற்றும் பத்ரகாளியம்மன் கோவில் செல்லும் பிரிவு சாலையின் பகுதியில் மழைநீர் செல்ல கால்வாய் வசதி இல்லை. அதனால் மழைக்காலங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. கொசுக்கள் உற்பத்தியாகி தொல்லையாக இருக்கிறது. துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மேச்சேரி பேரூராட்சி நிர்வாகம் மழைநீர் செல்ல கால்வாய் அமைக்க முன்வருவார்களா?

-சி.துரை, மேச்சேரி, சேலம்.

மேலும் செய்திகள்