கழிவுநீர் வாய்க்கால் பாலத்தில் உடைப்பு

Update: 2022-08-02 13:56 GMT

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை காமராஜர் நகர் புதிய தாலுகா அலுவலகம் அருகே உள்ள தெருவின் முகப்பில் கழிவுநீர் வாய்க்கால் மீது சிலாப்கள் அமைக்கப்பட்டு வாகனங்கள் செல்லும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த பாலம் இடிந்த நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் கழிவுநீர் வாய்க்காலின் பாதை உடைந்து கழிவுநீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே தேங்கி நிற்பதினால் இப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்