சங்கராபுரம் அருகே லக்கிநாயக்கன்பட்டி கிழக்குதெருவில் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அங்கு துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க கழிவு நீரை அகற்றுவதோடு, அங்கு கழிவுநீர் கால்வாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.