கச்சிராயப்பாளையம் கோமுகி ஆற்றில் கழிவுநீர் கலக்கிறது. மேலும் இறைச்சி கழிவுகளும் ஆற்றில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் ஆற்று நீர் மாசடைந்து வருவதால் அதில் குளிக்கும் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க ஆற்றில் கழிவுநீர் கலப்பதையும், குப்பைகள் கொட்டுவதையும் தடுக்க வேண்டும்.