திட்டக்குடி தாலுகா அலுவலகம் முன்பு மழைநீருடன் சேர்ந்து கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அங்கு கடும் துர்நாற்றம் வீசுவதால் தாலுகா அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். தாலுகா அலுவலகம் முன்பு தேங்கிய கழிவுநீரையே அகற்றாத, துப்புரவு ஊழியர்கள், எப்படி மக்கள் வசிக்கும் பகுதிகளை சுத்தமாக வைத்திருப்பார்கள் என அவ்வழியாக செல்லும் மக்கள் புலம்புகின்றனர். ஆகவே தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.