குடியிருப்பை சுற்றிலும் தேங்கும் கழிவுநீர்

Update: 2025-08-17 17:17 GMT

வாலாஜா-சோளிங்கர் சாலையில் உள்ள காவலர் குடியிருப்பு அருகில் கழிவுநீர் வசதி இல்லை. அங்குள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குடியிருப்பை சுற்றிலும் தேங்குகிறது. தற்போது மழைப் பெய்து வருவதால் கழிவுநீரும், மழைநீரும் கலந்து குட்டைபோல் தேங்கி நிற்கிறது. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து காவலர் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

-த.நித்யானந்தம், காரை.

மேலும் செய்திகள்