அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டியை அடுத்த தேளூர் ஊராட்சியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தேளூர் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள சாக்கடை கால்வாயில் ஒரு சிலர் வீட்டின் கழிவறையில் இருந்து இயற்கை உபாதைகளை திறந்து விடுகின்றனர். இதனால் சாக்கடை கால்வாயில் கழிவுநீர் கலந்து தெருவில் துர்நாற்றம் வீசுவதோடு அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
, .
, .