கழிவுநீர் கலந்த ஊருணி

Update: 2022-07-30 14:04 GMT

ராமநாதபுரம் மாவட்டம் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மழை நீரை சேமிக்க உள்ள ஊருணிகள் முறையாக பராமரிக்கப்படாமல் புதர் மண்டி முட்கள் வளர்ந்து காணப்படுகிறது. மேலும் சில ஊருணியில்  கழிவுநீருடன் சேர்ந்து குப்பைகளும் கலந்துள்ளன. ஊருணி நீரே பல்வேறு கிராம மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளன. எனவே மழை காலம் தொடங்கும் முன் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊருணிகளையும் சுத்தப்படுத்தி கழிவுநீர் கலப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்