கோவை நியூ சித்தாபுதூர் ஆவாரம்பாளையம் சாலை சக்தி விநாயகர் கோவில் எதிரே சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. அந்த வழியாக சென்று வரும் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே சாக்கடை கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்.