கோவை மோப்பிரிபாளையம் பேரூராட்சி வலையபாளையம் ஜே.ஜே. நகரில் 40-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கிருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியின்றி சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளதோடு கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக அங்கு வசிக்கும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே சாக்கடை கால்வாய் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.