தியாகதுருகம் நாகம்மை தெருவின் குறுக்கே கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாயை பொதுமக்கள் கடந்து செல்வதற்காக அதில் பொருத்தப்பட்டிருந்த இரும்பு கம்பிகள் உடைந்தது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். இது குறித்த செய்தி படத்துடன் புகார் பெட்டியில் நேற்று வெளியானது. இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் கால்வாயில் உடைந்த இரும்பு கம்பிகளை சரி செய்தனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த மக்கள் தினத்தந்திக்கு நன்றி தெரிவித்தனர்.