சேலம் தாதகாப்பட்டி 50-வது வார்டு காளியம்மன் கோவில் தெருவில் சாலையில் கழிவுநீர் தேங்கி உள்ளது. மேலும் அந்த சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இது குறித்து பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அங்கு சாலையில் கழிவுநீர் தேங்காதபடி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ராஜா, தாதகாப்பட்டி, சேலம்.