கழிவுநீர் வாய்க்காலால் விபத்து

Update: 2022-07-26 10:23 GMT
தியாகதுருகம் நாகம்மை தெருவின் குறுக்கே கழிவுநீர் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயை பொதுமக்கள் கடந்து செல்லும் வகையில் அங்கு இரும்பு கம்பி பொருத்தப்பட்டு மூடப்பட்டிருந்தது. இந்த நிலையில் அந்த இரும்பு கம்பிகள் தற்போது உடைந்து விட்டது. இதனால் அந்த கழிவுநீர் கால்வாயில் பொதுமக்கள் சிக்கி படுகாயம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்