நடவடிக்கை தேவை

Update: 2023-09-06 11:57 GMT

தேருர் பேரூராட்சிக்கு எஸ்.டி.காலனியில் சிறுவர்கள் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவின் பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையோரத்தில் உள்ள வடிகால் ஓடையில் விடப்படுகிறது. இதனால், கழிவுநீர் அந்த பகுதியில் தேங்கி துர்நாற்றம் வீசி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, கழிவுநீர் ஓடையில் பாய்வதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அய்யப்பன், தேருர்.

மேலும் செய்திகள்