ரிஷிவந்தியம் அருகே கானங்காடு கிராமத்தில் உள்ள கிழக்குதெரு, வடக்குதெரு மற்றும் நடுதெருவில் கழிவு நீர் வாய்க்கால் அமைக்கப்படவில்லை. இதனால் அங்கு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றுவதோடு அங்கு கழிவு நீர் கால்வாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.