மயிலம் ஒன்றியம் நெடிமொழியனூர் ஊராட்சியில் உள்ள கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளதால், கழிவுநீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் மழைக்காலங்களில் கால்வாய் நிரம்பி கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதால், அப்பகுதி பொதுமக்களுக்கு பலவித நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டியது அவசியம்.