தூர்வாரப்படாத கழிவுநீர் கால்வாய்கள்

Update: 2022-07-24 14:22 GMT

கரூர் மாவட்டம், கோம்புப்பாளையம் பகுதி வழியாக உபரி நீர் கால்வாய் சென்று புகழூர் கால்வாயில் கலக்கிறது. இந்த கால்வாயின் வழியாக ஏராளமான உபரிநீர் செல்கிறது. இந்நிலையில் கால்வாயில் முளைத்துள்ள பல்வேறு வகையான செடி, கொடிகளை அகற்றி பல ஆண்டுகள் ஆகிறது. இதனால் ஏராளமான செடி, கொடிகள் முளைத்துள்ளது. இதன் காரணமாக உபரிநீர் கால்வாய் வழியாக தண்ணீர் தேங்கி நிற்கிறது. எனவே உள்ளாட்சி துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கழிவுநீர் கால்வாயில் முளைத்துள்ள பல்வேறு வகையான செடி, கொடிகளை அகற்றி உபரி நீர் தங்குதடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்