மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஊராட்சி அண்ணா மண்டபம் எதிரே புதிதாக பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் கீழ் பகுதியில் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதன்காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மூக்கை மூடியபடி அந்த பகுதியை கடந்து செல்கின்றனர். மேலும், தேங்கி கிடக்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாலத்தின் கீழ் பகுதியில் கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுப்பார்களா?