புஞ்சைபுளியம்பட்டியில் பவானிசாகர் செல்லும் ரோடு பிரிவில் சத்தியமங்கலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் சாக்கடை கால்வாய் திறந்து கிடக்கிறது. தடுப்பு சுவர் ஏதும் இல்லாததால் பவானிசாகர் ரோட்டில் திரும்பும் வாகனங்கள் அடிக்கடி சாக்கடையில் இறங்கி விபத்து ஏற்படுகிறது. குறிப்பாக இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் சாக்கடையில் விழுந்து காயமடைகிறார்கள். எனவே சாக்கடையை சுற்றி தடுப்பு சுவர் அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.