கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி நகரின் மைய பகுதியில் பல ஆண்டுகளாக கழிவுநீர் கால்வாய் இல்லை. இதனால் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் விடப்படுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் பொது மக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் மழைக்காலங்களில் கடைகள் முன்பு மழைநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைகின்றனர். எனவே அப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சந்தோஷ், வேப்பனப்பள்ளி.